தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இனம் ஆகியவற்றின் மேம்பாடு குறித்த கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், துணுக்குச்செய்திகள் முதலியவற்றைத் ‘தமிழ்க்காவல்’ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.
உங்கள் நண்பர்கள் முதலிய தொடர்புடையவர்களுக்குத் தமிழ்க்காவலின் இணைய முகவரியை அன்புகூர்ந்து தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
தமிழ் இணைய இதழ் நடத்திவரும் நண்பர்களும், இணையப் புலங்கள்வழிப் பலவகையாலும் உலகத்தமிழர்களோடு தொடர்புடைய நண்பர்களும் தமிழ்க்காவலின் இணைய முகவரியைத் தங்கள் புலங்களில் போட்டு அவர்களை இவ்விதழின்பால் ஆற்றுப்படுத்துமாறு வேண்டுகிறோம்.
தமிழ் இலக்கியம், இலக்கணம் குறித்த ஐயவினாக்களை அனுப்பினால் அவற்றுக்குத் தமிழ்க்காவல் இதழில் விடையளிக்க முயல்வோம்.
சீரழிந்துகொண்டுவரும் தமிழ்மொழி தமிழ்ப்பண்பாடுகளைக் காப்பதையும் வளர்ப்பதையும் நோக்கமாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை. இவற்றைத் திட்டமிட்டு அழித்துவரும் தமிழ்ப்பகைவர்களின் ஏடுகள் பலவற்றுக்கும் எதிராக ஒரு நாளேடு நடத்தவேண்டும் என்ற தமிழ் நெஞ்சங்களின் தணியாத வேட்கையின் விளைவாகவே இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. இதற்கென இதுவரையில் சேர்ந்துள்ள தொகை (உரூபாய் 2,31,583) நாளேடு நடத்துவதற்குப் போதுமானதாக இல்லை. அந்த அளவை ஓரளவு எட்டும்வரை, தமிழ் கூறும் நல்லுலகெங்கும் இதைத் தெரியப்படுத்தி இதில் ஈடுபாடுள்ள தமிழ்ப்பெருமக்களின் உதவியையும் பெற விழைகிறோம். எனவே, ‘தமிழ்க்காவல்’ அச்சிட்ட நாளேடாக வெளிவர வாய்க்கும் காலம்வரை, இணையத் திங்களிதழாக நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
அன்புத் தமிழ்நெஞ்சங்களே, ‘செறுநர் செருக்கறுக்கும் கூரிய எஃக’மாக இந்த ஏட்டை நாம் உருவாக்கி நடத்தவேண்டும். எனவே உங்கள் தமிழுணர்வு சான்ற உள்ளத்தளவு பெரியதாக இதில் உங்கள் நன்கொடைப் பங்கும் அமைய வேண்டும் என்று விழைகின்றோம்.
அன்புகூர்ந்து நன்கொடைகளைத் தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடை யாகவோ, கேட்புக் காசோலையாகவோ, திரு தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி-605008 என்ற முகவரிக்கு அனுப்புக.
சென்ற தமிழ்க்காவல் இதழில் வந்த நன்கொடைப்பட்டியலுக்குப் பின் அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைகள்:
| அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை மொத்தம் | உரூ. 2,33,233 |
| திரு மா. கோபால கிருட்டினன், ஒர்சே, பிரான்சு | 7,700 |
| திரு க. துரையரசன், வேலாயதம் பாளையம். | 100 |
| திரு பொ. இராமதாசு, கோவை | 50 |
| ஆக மொத்தம் | உரூ. 2,44,083 |
அன்புடன்,
முனைவர் இரா. திருமுருகன், புதுவை, தலைவர், தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை.
முனைவர் தமிழப்பன், சென்னை-17, செயலர்,
தி. ப. சாந்தசீலன், புதுவை-9, பொருளர்,
மு வ. பரணன், திருச்சிராப்பள்ளி, உறுப்பினர்,
இரா. செம்பியன், இராம்பாக்கம்.
(தமிழ் வளர்ச்சி அறக்கட்டளையினர்)
62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. பேசி 0413-2201191

