திருவள்ளுவர் ஆண்டு உ0௩௯, துலை, க ( 17 - 10 - 2008 ) திங்கள் மின்னிதழ்ஆண்டு : க இதழ் : ௫

மெல்பேன் நகரில் வெற்றிகரமாக நடைபெற்ற அமைதி பேரணி

மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன.

இளையோர் அமைப்பினரின் தொண்டர்களால் சனக்கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டு நகரின் வழமையான செயற்பாட்டுக்கு பங்கம் விளைவிக்காமலும் எமது மக்களின் பாதுகாப்பும் உறுதிபடுத்தப்பட்டது

தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழகத்தில் வெளிவந்த எங்களுக்கும் குரல் கொடுங்கள் என்ற இறுவட்டினை ஆங்கிலத்தில் மொழி மாற்றி அதனை ஏனைய இனத்தோருக்கு கொடுக்கப்பட்டது.ஏறத்தாள 500 இறுவட்டுக்கள் இவ்வாறு விநயோகிக்கப்பட்டது.வேற்றினத்தவரை இன்று நாம் நடாத்திய போராட்டத்தை வெகுவாக கவர்ந்தது.