எழுத்துச்சீர்திருத்தம் பனை ஓலையில் எழுதப்பட்ட காலத்திலும் நிகழ்ந்தது. அச்சு இயந்திரங்களும் தட்டச்சும் பயன்பாட்டுக்கு வந்த நேரத்திலும் தேவப்பட்ட. தந்தைப் பெரியார் துணிந்து கருத்தை வெளியிட்டார், நடைமுறையும் படுத்தினார். அதனை மருதூர் கோபாலமேனன் இராமச்சக்திரன் ஆட்சி ஆணை பிறப்பித்து வழக்காற்றில் கொணர்ந்தது.
இன்று கணினிகளின் காலம். கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டச் சிக்கல்களுக்கு தீர்வு தேடப்பட்டது. யுனிகோடு அமைப்பின் வழி உலக மொழிகளின் எழுத்துகளுக்கு குறியீடுகள் ஒதுக்கப் பெற்றன. எந்த மொழி எழுத்துகள் குறியீட்டு மொழியாக எளிதில் சிக்கலின்றி மாற்றம் செய்யப்படுமோ அந்த மொழித் தகவலை உலகின் பிற மொழிகளுக்குப் பெயர்ப்பு செய்வது எளிது. கருவியே மொழியாக்கம் செய்து தரும். அந்த இலக்கு நோக்கித் தமிழ் நடையிடும் காலத்தில் பாவலர் செம்பியன் அறிவியல் தமிழின் ஆக்கத்திற்கு தடையாக உள்ளவற்றை அகற்ற எண்ணினார். பிற மொழி எழுத்துகளை இரவல் பெறாமல் குறியீடுகள் சேர்த்து எம்மொழி ஒலியையும் தமிழில் எழுதிக் காட்ட முடியும் என்ற கருத்தை முன் மொழிந்தார். அதயும் அவர்க்கு முன்பு எழுத்துச் சீர்த்திருத்தம் கருத்தாக்கம் பெற்ற வரலாற்றையும் பதிவு செய்யத் துவங்குகிறேன். கணினிக்கும் எழுத்துச் சீர்திருத்தம் கட்டாயம் தேவை, அறிவியலுக்கும் தேவை. எனவே தொடரட்டும் விவாதம்! தீர்வுகள் தேடிப் புறப்படுவோம்! தெளிதமிழை உலக மொழி ஒலி எல்லாம் உள்வாங்கிய ஒளிர்தமிழாக மாற்றம் செய்வோம்
1. மூவாத் தமிழுக்கு மு.வ. மொழியும் மாற்றம் தமிழ் எழுத்ச் சீர்திருத்தம் என்று சிந்திக்க முற்படும் முன்பாக தமிழறிஞர்கள் கருத்துகளைப் பதிவு செய்துவிட்டுத் தொடங்கினால் என் பணி எளிதில் முடியும் எதிர்ப்புகளும் முனை மழுங்கும்.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணை வேந்தராக விளங்கிய பொழுது முனைவர். மு. வரதராசனார் எழுதியதைச் சுட்டிக் காட்ட விழைகிறேன்.
“கட்டை வண்டி கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் அது விந்தையான படைப்பாகவே போற்றப்பட்டது. ஆனால் அந்தக் காரணம் கொண்டு இன்று அதைப் போற்றத் தேவயில்லை. கார்களும் லாரிகளும் நிறைந்த இந்தக் காலத்திற்கு ஏற்றபடி வாழ்க்கையில் முன்னேற வேண்டுமே தவிர, பழைய கண்டுபிடிப்புகளின் பெருதைய நினைத்து தேங்கி நிற்கக்கூடாது. கார்களும் லாரிகளும் இல்லாத இடத்தில் வேண்டுமானால் கட்ட வண்டிகளைப் பயன்படுத்தலாமே தவிர எங்கள் முன்னோர் படைத்தவை என்று அவற்றை விட மனமில்லாமல் தயங்கக் கூடாது” என்று எழுத்துச் சீர்திருத்தத்தில் இன்றியமையாத் தன்மையை மு.வ. சுட்டிக் காட்டுகிறார்.
இந்தப் பத்தியில் கார், லாரி என்ற இரண்டு ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் தந்துள்ளார். கார் என்பது கார்காலத்தைக் குறிக்கும் என்று புலவர்கள் சொன்னாலும் கார் என்றால் மகிழுந்து என இன்று அனைவர்க்கும் புரியும். மகிழுந்து என்று புதிய கலைச் சொல் உருவாக்கப்பட்டாலும் அதை அனைவரும் பின்பற்றினாலும் அப்போதும் தமிழில் ஒரு பெருங்குறை நீடிக்கும் ஒரு காரின் உள் ஆயிரக்கணக்கான உதிரி உறுப்புகள் உள்ளன. இவற்றில் பெயர்கள் எல்லாம் ஆங்கிலமாக உள்ளன. பயன் பாட்டில் அந்தப் பெயர்கள் கார் ஓட்டுபவர் முதல் பழு பார்ப்போர் வரை அவர்தம் நாவில் உலவுகின்றன. லாரி என்ற சொல்லயும் மு.வ. பயன்படுத்கிறார். லகரம் ரகரம் இரண்டும் மொழிக்கு முதலில் வரா என்பதால் இலாரி என்றன்றோ மு.வ. எழுத வேண்டும் என்போரும் உளர். தமிழ்மொழி எதிர்கொள்ளும் சிக்கல் இதான்.
பாவலர் செம்பியன் இச்சிக்கல் பற்றி அண்மைக் காலத்தே ஆழ்ந்து சிந்திப்பவர். அவர் கூறுவதைப் பார்ப்போம் “அண்மைக் காலங்களில் வியத்தகு வளர்ச்சி அடைந்து வரும் அறிவியல் துறைகளில் எந்தவொரு மொழியாலும் ஈடுகொடுக்க முடியாத அளவிற்கு ஏராளமான அறிவியல் சொற்கள் ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பிறமொழிகளில் உள்ள அறிவியல் சொற்களைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு வர வேண்டியது உடனடித் தேவையாகும் என்றாலும் அது எளிதான செயல் அல்ல என்பத இங்கே ஒப்புக் கொண்டாக வேண்டும். இது நாள்வரை நாம் எந்தெந்த துறைகளில் இருந்து எத்தனை விழுக்காடுகள் பிறமொழிகளில் இருந்து அறிவியல் சொற்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்துக் கொண்டு வந்திருப்போ மென்றெண்ணிப் பார்த்தால் அது மிகச் சொற்ப விழுக்காடுகளாகவே இருக்கும். அதுவும் பன்னெடுங்காலமாக முயன்றும் இந்நிலை இனிமாத்திரம் என்ன செய்து விடப் போகின்றோம் என்ற மலைப்பே மேலிடுகிறது.” என்பார் செம்பியன்.
எனவே ஆங்கிலச் சொற்களை மு.வ. தமிழ் ஒலியில் பயன்படுத்தியதை எதிர்ப்பது பொருளற்றது. மகிழுந்து. சரக்குந்து என்று மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்து வதை எதிர்க்கவில்லை. பேருந்து என்ற சொல் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மகிழுந்து என்ற சொல் பயன்பாட்டில் இல்லை. அவற்றின் உட்பொதிந்துள்ள உதிரி உறுப்புகள் பெயர் தமிழாக்கம் செய்யப்பட்டு புழக்கத்தில் ஏற்கப்படுமா என்பது விடை தெரியாத வினாவாக உள்ளது.
கண்மூடித்தனமான பழமைப்பற்று கூடாது: மு.வ.
“ஒருமொழியின் எழுத்துக்களைப் பற்றியும் இதே உண்மை பொருந்தும் உலக மொழிகளின் எழுத்துகள் எல்லாவற்றுக்கும் பொருந்தும். தமிழ் மொழியின் எழுத்களுக்கும் பொருந்தும். கற்களில் எழுத்துகளச் செதுக்கிய காலத்திலும். பனை ஓலையில் எழுத்ததாணியோடு எழுதிய காலத்திலும், எழுத்துகளின் வடிவங்கள் அவற்றிற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டிருந்தன. இன்று கற்களில் செதுக்கப்படும் தமிழ் மிகமிகக்குறவு. “பிளாஸ்டிக்” முதலியவற்றில் எழுத்துக்களைச் செய்து பொருத்தல் பெருகிவிட்ட. (ஞெகிழி என்றிடாமல் பிளாஸ்டிக் என்று அச்சொல்லை மு.வ. பயன்படுத்துவது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்) பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதும் முறை அடியோடு மறந்து விட்ட. வெள்ளைத் தாளில் உயர்ந்த ஊற்றுப்பேனா கொண்டு எழுதும் முறை ஓங்கி விட்டது. தட்டெழுத்தில் அடிக்கும் முறையும் அச்சுப் பொறியில் எழுத்துகளைக் கோர்த்து அச்சிடும் முறையும் குறந்த நேரத்தில் மிக வேகமாகச் செய்யும் “லினோ டைப் முறயும் பெருகிவிட்டன. படித்தல் என்றால் தட்டெழுத்து முறையில் அடிக்கப்பட்டவற்றையும் அவற்றைவிட மிகுதியாக அச்சிடப்பட்ட செய்திதாள்களையும் நூல்களையும் படிப்பதே பழக்கமாகி விட்டது.
ஆகவே பனை ஓலையில் இரும்பாணியால் எழுவதற்கு உதவியாக அமைக்கப்பட்ட பழங்கால எழுத்து வடிவங்களை இனியும் போற்றிக் கொண்டிருப்பதில் பொருள் இல்லை. தட்டெழுத்துப் பொறிக்கும், அச்சுப் பொறிக்கும் ஏற்ற வகையில் அவற்றைச் சிறிது மாற்றியமைக்க முற்பட வேண்டும். இந்த வகையான முன்னேற்றம் கருதிய சீர்திருத்தம் செய்யும் போது கண்மூடித்தனமான பழமைப்பற்று மொழிப்பற்று என்ற பெயரால் குறுக்கிடக் கூடாது” என்று அறிவுறுத்திவிட்டு முனைவர் மு. வரதராசனார் தமிழில் உள்ள சிறு குறைபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார்.
“க் ங் ச் ஞ் முதலான மெய்யெழுத்துகள் பதினெட்டு தமிழில் உள்ளன. ஆங்கிலத்தில் கே என்றும் மெய்யெழுத்துடன் ஏ என்றும் உயிரெழுத்தைச் சேர்த்து கா என உயிர்மெய் எழுத்த அமைக்கின்றார்கள். அதுவே இயல்பான அமைப்பு ஆகும் . தமிழில் க், ங், ச், ஞ் முதலிவற்றின் மேல் உள்ள புள்ளிய நீக்கிவிட்டால் அகர உயிரோடு சேர்ந்த உயிர்மெய் ஆகின்றன. இது அவ்வளவு இயல்பானது அன்று என்றாலும் ஒரே வகையான அமைப்பாக இருப்பதால் ஏற்றுக் கொள்ளத் தக்கதே எனலாம்.
தமிழ் எழுத்துகள் கூடியவரையில் முற்போக்காக அமைந்த எழுத்துகளே. சீன எழுத்துகளும் சப்பான் எழுத்துகளும் போல் (படங்கள் போல்) அமைந்து நூற்றுக்கணக்கில் பெருகியவை அல்ல. அரபி முதலிய எழுத்துகளைப் போல் புள்ளிகளும் நுண்கோடுகளும் மிகுந்தவைகளும் அல்ல. உயிரெழுத்துப் பன்னிரெண்டும் மெய்யெழுத்துப் பதினெட்டும் ஆகச் சுருங்கிய அளவில் முப்பது எழுத்துகள் உடைய தமிழ் அந்த முப்பது எழுத்துகளும் தளிவான வடிவ வேறுபாடுகள் கொண்டவை. மயக்கத்திற்கு அவ்வளவாக இடந்தராத வகையில் தெளிவு பெற்றவை. மெய்யெழுத்துகளை அடுத்துள்ள உயிரெழுத்துகள் வரும் போது உயிர்மெய் எழுத்துகள் எனப் பெயர் பெற்றுச் சேர்ந்து அமைக்கப்படுவதில் சில குறைகள் உள்ளன. இன்று அந்தச் சில குறைகளே தட்டெழுத்துக்கும் அச்சுக்கும் இடர்பாடுகளாக உள்ளன.” என்கின்றார் முனைவர் மு.வ.
அய்ரோப்பிய மொழிகளில் வசதியான நில “aeiou என்னும் ஆங்கில உயிரெழுத்துகள் மெய்யெழுத்துகளோடு சேரும் போது ka, ke, ki, ko, pa, pe, pi, po, pu என மெய்யும் உயிரும் தனித்தனியே எழுதப்படுகின்றன. அதனால் மெய்யும் உயிருமாகிய 26 எழுத்களைக் கொண்டே தட்டெழுத்தும் அச்செழுத்தும் அமைகின்றன. அதனால் எழுத்துச் சுருக்கமும் வடிவத் தெளிவும் ஐரோப்பிய மொழிகளுக்கு இயல்பாக உள்ளன என்கிறார் முனைவர் மு.வ. தமிழிலும் அவ்வாறு அமைய வேண்டுமானால் உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டுமாகச் சில எழுத்துகளில் சுருக்கலாம். அவ்வாறானால் க, கா, கி, கீ, ப, பா, பி, பீ என மெய்யும் உயிரெழுத்தின் சில குறியீடுகளுமாக முப்பது எழுத்துகளுக்கு மேல் பத்து அல்லது பதினொன்று வர வேண்டி வரும். ஆக நாற்பது / நாற்பத்தொன்று வடிவங்கள் அமைக்க நேரும் (/ இந்தக் குறியீடு அல்ல என்று பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இது தமிழில் உள்ள குறியீடு அல்ல, தமிழ் வழக்கும் அல்ல எனினும் நம் பயன்பாட்டில் உள்ளது. இந்தக் குறியீடு பாவலர் செம்பியன் கை வண்ணத்தில் பெறப்போகும் புதிய பொருள் பற்றி இறுதியில் நீங்கள் தௌ¤வு பெறுவீர்கள்)
ஆங்கிலத்தில் முதல் எழுத்து வடிவங்களும் சிறு எழுத்து வடிவங்களும் (Capital letters and small letters) ஆக 52 வடிவங்கள் இருப்பதை உணரும் போது 40/41 வடிவங்கள் மிகுதி அல்ல என்ற வாதிடுகிறார் முனைவர் மு.வ.
அறியாமை அல்ல: கண்மூடித்தனம்
“ஆனால் உயிரெழுத்துதின் குறியீடுகள் ஒழுங்காக இருந்தால் தான் இது இயலும். கா, ஙா, சா, ஞா, டா, ணா, தா, நா, பா,மா, யா, ரா, லா, வா, ழா, ளா, றா, னா என ஆகாரத்தின் குறியீடு எல்லா மெய்களுக்கும் பின் “ா” என அமைய வேண்டும். ணா என்பது ணா எனவும் றா என்பது றா எனவும் னா என்பது னா எனவும் முறை மாறாக அமைந்துள்ளன. அது போன்ற இடர்பாடுகளைக் களைந்தால் தான் தட்டெழுத்தும் அச்செழுத்தும் ஒழுங்கு பெறும். பனை ஓலையில் எழுதும் போது, ஓர் எழுத்தை முடிக்கும்போது ஆணியை நிறுத்துவதும் அடுத்த எழுத்தைத் தொடங்கும் போது ஆணியை குத்தித் தொடங்குவம் இடர்ப்பாடாக இருந்திருக்கலாம். அதனால் பழைய முறப்படி ணா,றா,னா, என எழுதுவது எளிதாக இருந்திருக்கலாம். புதிய வழக்குப்படி ணா,றா,னா, என்று எழுதுவது இடையூராக இருந்திருக்கலாம். அதனால் சேர்த்து எழுதும்போது அந்த வடிவங்களைக் கையாண்டு பழகி இருக்கலாம்.
ஆனால் ஓலையும் எழுத்தாணியும் இல்லாத காலத்தில் வெள்ளைத் தாளில் ஊற்றுப் பேனாவால் எழுதும் வாய்ப்பு உள்ளபோது ணா,றா, னா, என்று முறைப்படுத்தி எழுவதுதான் எளிது. இயல்பான. ஆகையால் இந்தச் சிறு சீர்திருத்தம் செய்யத் தயங்குவது அறியாமை அல்ல கண்மூடித்தனம் ஆகும்.
இருபதாம் நூற்றாண்டின் வேகத்துக்கு ஈடு அவ்வாறே கரி, ஙரி, சரி, டரி, தரி, நரி என்று இதர உயிரின் குறியீட்டை மெய்யெழுத்துகளின் பின் தனியே சேர்ப்பதே பொருத்தம் ஆகும். ஆனால் மேற்கூறிய காரணத்தால் பனை ஓலையில் ஆணியை நிறுத்துவதிலும் தனியே தொடங்குவதிலும் உள்ள இடர்ப்பாட்டால் கி. ஙி , சி, டி என மெய் வடிவையும் உயிர்க் குறியீட்டையும் சேர்த்து எழுதப் பழகினார்கள். இன்று ஒருமுறை வகுத்துக் கொள்ளலாம். ஊற்றுப் பேனா கொண்டு காகிதத்தில் எழுதும்போது மட்டும் பழைய முறைப்படியே கி,ஙி.சி,ஞி,டி,ணி,நூரி,டரி,ணரி,தரி,நரி என்று மெய் வடிவின் குறியீட்டைத் தனியே அமைக்கலாம். அதனால் பெறும் நன்மைகளைக் கணக்கிடுவோம்.
கி.ஙி,சி என்ற வடிவங்களைத் தட்டெழுத்திலும் அச்சிலும் கொண்டால் எத்தனை வடிவங்கள் தேவப்படுகின்றன? பதினெட்டு மெய் வடிவங்களும் பதினெட்டு உயிர்மெய் வடிவங்களுமாக முப்பத்தாறு வடிவங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் மேற்கூறியவாறு உயிர் குறியீட்டைத் தனியே அமைக்கும் முறையை, ஆங்கில எழுத்தில் உள்ள முறையை மேற்கொண்டால் பதினெட்டு மெய் வடிவங்களும் ஒரேயொரு உயிர் குறியீடும் தேவைப்படுகின்றன. ஈடாகப் 19 வடிவங்கள் போதுமானவை ஆகின்றன. 17 வடிவங்கள் குறைகின்றன. இவ்வாறே ஒவ்வொரு மெய்க்கும் எழுத்து வடிவங்களைக் குறைப்பது இந்த நூற்றாண்டின் மேகத்திற்கு எவ்வளவு பெரிய நன்மை என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்” என முனைவர் முனைவர் மு.வ. தம் ஆய்வுரையில் எழுதியுள்ளார்.
இவ்வாறே உ, ஊ, அய் முதலான உயிர் குறியீடுகளைச் சேர்ப்பதிலும் துணிந்து சீர்திருத்தம் மேற்கொண்டால்தான், மொழிக்கும் சமுதாயத்திற்கும் நன்மை விளையும். உ என்ற உயிரின் குறியீடாக என்ற வடிவையும் ஊ என்ற உயிரின் குறியீடாக என்ற வடிவையும் ஒரே முறையாக ஒழுங்காக அமைக்க முற்பட்டால் சு, ணு, நு,பு,யு,லு,வு,று, னு ஆகிய வடிவங்களிலும் சீர்திருத்தம் செய்வது கடமையாகும். அவ்வாறே ஊ என்பதன் குறியீட்டிலும் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
ஐ என்ற உயிரின் குறியீடு என்பதாகும். க, வ, முதலிய உயிர்மெய் வடிவங்களுள் ண,ல,ன என்பவை முறைப்படி அமையாதவை. ஆனால் அவைகளும் ஒரு காலத்தில் பனை ஓலையில் ஆணியால் ஏற்படும் இடையூறுகளைக் கருதியே ண, ல எனச் சேர்த்து எழுத நேர்ந்தது. ஊற்றுப்பேனா மிகுந்த இந்தக் காலத்தில் ஒழுங்கான குறியீட்டைக் கையாண்டு எழுதுவதில் இடர்பாடு இல்லை. தட்டெழுத்துக்கும் அச்சுக்கும் நன்மயே ஆகும். இந்தச் சீர்திருத்த முறையைத் துணிந்து கையாண்டு புதுவழிகாட்டிய பெருமை விடுதலை ஏட்டிற்கும் தந்தை பெரியார்க்கும் உரியது என்பதை எவரும் மறுக்க இயலாது. பல ஆண்டுகளுக்கு முன்பே அவரால் புகுத்தப் பெற்ற இந்தச் சீர்திருத்தத்தை இன்றும் நாடு முழுமையாக ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்கது. நன்மையும் முற்போக்கும் வெற்றி பெறாமல் கண்மூடிப்பழக்கமே நீடித்திருக்க விட்டிருப்பது அறிவியல் நூற்றாண்டாகிய இக்காலத்திற்கச் சிறிதும் பொருந்தாததாகும்.
இன்னுமொரு குறையும்களையப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மெய்வடிவிற்குப்பிறகு உயிர்க் குறியீடு அமைவதே உலக மொழிகள் எல்லாவற்றிலும் உள்ளது. வட இந்திய மொழிகளிலும் உள்ளது. கன்னடம். தெலுங்கு ஆகிய திராவிடமொழிகளிலும் உள்ளது. ஆனால் இதற்கு நேர் மாறான பொருத்தமும் இல்லாத ஒருமுறை எவ்வாறோ தமிழில் புகுந்துள்ளது.
கெ, ஙெ,செ,நெ,டெ,ணெ
கே, ஙே, சே, நே, டே, ணே
முதலிவற்றில் மெய்க்குப்பின் வர வேண்டிய உயிர்க் குறியீடு மெய்க்கு முன் வருகிறது.
கொ, ஙொ, சொ, நொ, டொ, ணொ
கோ, ஙோ, சோ, நோ, டோ, ணோ
முதலிவற்றில் உயிர்க் குறியீடு மெய்க்கு முன்னும் பின்னுமாகிய இரண்டிடத்தும் வருகிறது. இந்தக் குறையைக் களைதல் கடமை என்று செயலில் முற்படுவதற்குக் காலம் ஆகலாம். பிறகு கருதுவோம் என்று இது ஒத்திவக்கப்படலாம். ஆனால் இதுகுறை என்று இன்றே உணர்தல் அறிஞர் கடமையாகும்.
இவ்வாறு நம் முன்னேற்றத்துக்கு உதவியான எழுத்துச் சீர்திருத்தம் பற்றி ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த முற்போக்கிற்கு முட்டுக்கட்டை இடுவதற்கு யாரும் முன் வராதவாறு இதில் உள்ள நன்மைகளைப் பலர்க்கும் எடுத்துரைத்து விளக்க வேண்டும். மொழி வளர்ச்சிக்கு உரிய நல்லதொரு தொண்டு இது என்பதைத் தமிழகம் விரவில் உணர்த்துவதாக.
நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா


