|
முனைவர்
இரா.திருமுருகன்
|
யாப்பிலக்கணம்
எளிய முறையில் மரபுபாவலர் ஆகலாம்! - முனைவர் இரா. திருமுருகன்

அழகுணர்வும் பாட்டுள்ளமும் படைத்த இளைஞர் சிலர் தங்கள் உணர்வுகளைப் பாட்டாக வடித்து வெளிப்படுத்த விரும்புகிறார்கள். ஆனால் தமிழில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து பண்பட்டுள்ள, வியப்புக்குரிய நமது தமிழ் யாப்பிலக்கணத்தை அவர்கள் கற்றுக்கொள்ள முன்வருவ தில்லை. இதற்கு, அந்த இலக்கணநூல்கள் ஆசிரியர் துணையின்றிக் கற்கமுடியாதபடி செய்யுள் வடிவில் இருப்பது ஒரு காரணமாயிருக்கலாம். யாப்பிலக்கணம் பாட்டுக்கு விலங்கு என்று கூறும் “புதுக்கவிஞர்கள்” இன்று புகழ்மிக்க பாவலர்கள் என்று விளம்பரம் பெற்றிருப்பது அவர்கள் யாப்பிலக்கணத்தைப் புறக்கணிக்க மற்றொரு காரணமாயிருக்கலாம். எனவே, தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தோரும் ஆசிரியர் துணையின்றித் தாமே எளிதில் யாப்பிலக்கணத்தைக் கற்றுப் பாவலராகும் வகையில் பாவலர் பண்ணை என்ற நூல் எழுதப்பெற்றுள்ளது. இனி அந்நூல் பகுதி பகுதியாகத் தமிழ்க்காவலில் வெளிவரும். முறைப்படிப் பாட்டெழுத விரும்பும் தமிழ்கூறு நல்லுலகெங்குமுள்ள தமிழர்கள் இதனைப் பொறுமையுடன் பயின்று பயன்பெறலாம். இதில் உள்ள பயிற்சி வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பினால், அடுத்த இதழில் அதன் திருத்தம் வெளிவரும்.
கட்டுரைகள்
எழுத்துச் சீர்திருத்தம்: வரலாறும் வருங்காலமும் : தொடர் - 2
பெரியாரே முன்னோடி! தமிழுக்கு வழிகாட்டி - நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை

பனை ஓலைக் காலம் இன்றில்லை. காகிதம் அந்த இடத்தைப் பிடித்தது. தட்டச்சுகளும் அச்சுப் பொறியும் ஆளுமை செலுத்தின. அதற்கான எழுத்துச் சீர்திருத்தங்கள் பற்றி முதன் முதலில் சிந்தித்தவர் தந்தை பெரியார். இன்று அறிவியலை தமிழில் கொணர்வதற்காகச் சிந்திப்பவர் பாவலர் செம்பியன். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் இன்னமும் முழுமையாக ஏற்கப் பெறவில்லை. ஓரளவு ஏற்கப்படவே எண்ணற்ற தடைகளை எதிர்கொண்டது. தந்தை பெரியார் 20.1.1935 அன்று குடியரசு தலையங்கத்தில் எழுதிய வரிகள் உள்ளது உள்ளவாறு கீழே தரப்படுகின்றன.
“தமிழ் பாஷை எழுத்துகள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகு காலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்ராயங்களாகும். தோழர் குருசாமி அவர்கள் எழுதியதுபோல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய் வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.
ஒரு பாஷையோ ஒரு வடிவமோ அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, எவ்வளவு தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லித் கொள்கிறாமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கிறது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.” என்று விரிவான முன்னுரையோடு தந்தை பெரியார் மொழிச் சீர்திருத்தம் பற்றிய தன் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
திருக்குறளில் சமயம் (பகுதி-2) - முனைவர் க.நெடுஞ்செழியன்

மேலை நாட்டவரும் நம்மவரும் அறிந்துள்ள இன்றைய சைனம் என்பது வர்த்தமானர் என்னும் மகாவீரரால் வடிவமைக்கப்பட்ட சைனமேயாகும். பார்சுவநாதரின்,
கொல்லாமை (அகிம்சை)
வாய்மை (சத்தியம்)
கள்ளாமை (ஆஷ்தேயம்)
அவா மறுத்தல் (அபரிகிரகம்)
ஆகிய நான்கு கோட்பாடுகளுடன் 'துறவு' எனும் பிரமசரியத்தை இணைத்து 'பஞ்சவர்த்தம்' என ஐந்து நெறிகளாக வகுத்தவர் மகாவீரர் ஆவார். மேற்காட்டிய ஐந்தும் துறவு நெறியைப் பின்பற்றிய அனைத்துச் சமயங்களுக்கும் - கோட்பாட்டினருக்கும் - பொதுவானவை என்பது இங்கே கருதத்தகும். என்ரிச் சிம்மர், (Henrich Zimmer) இந்திய மெய்யியல், ஆரியர்கட்கும் ஆரியரல்லாத திராவிடர்களுக்கும் இடையே நடந்த கருத்து மோதலில் ஏற்பட்ட ஒன்று எனக் கூறுவார். மேலும்,
பார்ப்பனர்கள் வேதங்களின் காப்பாளர்களாக இருக்கும் அதே வேளையில், திராவிடர்களின் சிந்தனை மரபும் ஆன்மீகக் கோட்பாடுகளும் அரச மரபினர்களாகவும் கறுப்பு நிறமுடையவர்களாகவும் ஆரியர் வருகைக்கு முற்பட்ட மரபைச் சார்ந்தவர்களாகவும் இருந்த இந்த மண்ணின் மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. சைனம் மற்ற திராவிட சமயங்களான எண்ணியம் (சாங்கியம்), ஓகம், பௌத்தம் ஆகிய கோட்பாடுகளை விட மேம்பட்ட நிலையில் திராவிடர்களின் சிந்தனை மரபு எளிமையாகவும், பகட்டில்லாமலும் இருமை இயல்புகளைக் கொண்டுள்ளது. அந்த இருமை இயல்புகளே உபநிடதுகளுக்கும், இரண்டற்றதான (அத்துவித) கோட்பாட்டை வற்புறுத்தும் வேதாந்தத்திற்கும் காரணமாக இருந்துள்ளது.....
என விளக்குவதால் அறியலாம்.
பேணாமை பேதை தொழில் - பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
உலகின் நாகரிக வரலாற்றைப் பார்ப்போமானால் முன்னேற்றம் வளர்ச்சி மேம்பாடு என்பவை எல்லாம் முயற்சி, ஈடுபாடு, அக்கறை, பேணுதல் உணர்வு ஆகியவற்றாலேயே ஏற்பட்டு வந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
உடம்பை அல்லது உள்ளத்தை வருத்தும் முயற்சியில்லாமல் எதையாவது யாராவது உருவாக்கியமைக்குச் சான்று காட்ட முடியுமா? முயற்சியினும் பெரியது விடாமுயற்சி. அறிவியல் அறிஞர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளையும் புத்தாக்கங்களையும் எத்தனையோ தோல்விகட்குப் பின்னும் எத்தனையோ தடைகளை மீறியுமே செய்துள்ளனர்; உருவாக்கியுள்ளனர். மலர்ச்சிக்கு அடிப்படை முயற்சியே.
ஆர்வம், ஈடுபாடு, அக்கறை ஆகியவும் வளர்ச்சிக்குரிய பண்புகளே. புத்தாக்கம் படைப்பதில் ஆர்வம், தன்போக்கில் போவதுதான் வளர்ச்சி. அதுவே இயல்பானது. கட்டுப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவது செயற்கையானது என்று யாரேனும் கூற முடியுமா?
உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து தமிழினத்தை மீட்பது எவ்வாறு? - 5
உலகமயமாதலால் அயற்படுத்தப்பெறும் தற்காலத் தமிழரின் வாழ்வியல்
உலகமயமாதல் குறித்து இன்னும் நம்முள் பலர் விழிப்படையவில்லை என்பதை இத்தொடர் குறித்து எனக்கு வந்த மிகச்சில தொலைபேசிப் பேச்சுகளும் மின்னஞ்சல்களும் அறிவுறுத்துகின்றன.
உலகமயமாதல் என்பது உலகமுழுவதுமுள்ள நாடுகள் தொடர்பான பொருளியல் வரலாற்றில் 1981ஆம் ஆண்டு தியோதர் இலெவிட்டு என்பார் தாமெழுதிய 'அங்காடிகளின் உலகமயமாதல்' என்ற நூலில் பயன்படுத்தப்பெற்றது. பின்னர் தற்பொழுது குமுகவியலிலும் உலகந் தழுவிய, சிறப்புமிக்க செயல்முறையாகப் பயன்படுத்தப்பெறுகிறது. உலகமயமாதலின் இயங்கியல் - தமிழினத்தின் பண்பாட்டுக் கூறுகளையும் அடையாளங்களையும் உலக அளவில் எவ்வாறு தாக்கி வருகிறது என்பதை விழிப்புறுத்துவதே இத்தொடரின் நோக்கம்.
தமிழன் என்றால் கொழும்பும் புது டில்லியும் ஒன்றுதான் !

இந்த ஆய்வுக் கட்டுரையைப் பார்க்கும் எவருக்கும் அதிர்ச்சியும் சிலருக்கு என் மீது வெறுப்பும் வரலாம். ஆனால் உண்மைகள் எப்போதும் ஒரு சிலருக்காயினும் கசப்பானதாகவே இருக்கும். பலரின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக ஒரு கருத்து வெளிபடுத்தப்பட்டால் கணக்கற்றோரின் கண்டனத்துக்கு அந்தக் கருத்தும் கருத்துக்கு உரியவரும் தண்டைனைக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வுகளையும் மனித வரலாறு கண்டுள்ளது. அப்படித் தண்டனைக்கு உள்ளானவருள் சாரள்ஸ் டார்வினும் அவரது உயிர்களின் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் இன்றும் மதவாதிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி இருப்பது பலரும் இத்தனை நூறு ஆண்டுகள் கழிந்த நிலையிலும் கண் கூடாகக் காணும் உண்மைகளாகும்.
இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் அடைந்த காலம் ஒன்றாகவும் இரு நாடுகளும் ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தாலும் சில பொதுவான காரணிகள் இருப்பதை காணலாம். அடிப்படையில் இருநாடுகளும் பிரித்தானிய ஆதிக்கத்தில் விடுபட நினைத்தனவே அல்லது இரண்டு நாடுகளுமே ஜனநாயக ஆட்சி முறையில் ஆழமான நம்பிக்கையோ ஈடுபாட்டோ ஏற்படும் மனப்பான்மையோ கொண்டிருக்கவில்லை என்பதை இருநாடுகளிலும் உள்நாட்டு விவகாரங்கள் கையாளப்பட்ட விதத்திலிருந்து புரிந்துகொள்ளமுடிகிறது.
கருத்துக்களம்
நாம் எவரையும் நம்பிப் போராட்டம் நடத்தவில்லை எமது மக்களின் பலத்திலேயே நாம் போராட்டம் நடத்துகின்றோம்: பா.நடேசன்

நாங்கள் எந்த நிறுவனத்தையோ, அமைப்பையோ எந்த வெளிநாட்டு அரசசார்பற்ற அமைப்புக்களையோ நம்பிப் போராட்டம் நடத்தவில்லை. எங்களது மக்களுடைய பலத்திலேயே இந்த விடுதலைப் போராட்டம் பெரியதொரு தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்ந்திருக்கின்றது.
ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களை அகற்றிவிட்டு பெரியதொரு பொருளாதாரத் தடையை ஏற்படுத்த சிங்கள அரசுகள் முயற்சிக்கின்றது.
ஆனால், எங்களுடைய மக்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றார்கள். இவ்வாறு வட்டக்கச்சிக் கோட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளினதும், இடம்பெயர்ந்த பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்தார்.
பின்னகர்வது வீழ்வதற்கல்ல...ஒரு நிரந்தரமான நிமிர்விற்கு - இதயச்சந்திரன்

விடுதலைக்கான போர், கொடிய தடங்களை அழித்து தனது விழுதுகளை விசாலித்த போது, ‘சமாதானம்', ‘போர்நிறுத்தம்' என்கிற சிங்களத்தை காக்கும் கவசங்களை காவிக்கொண்டு வந்தது, சர்வதேசம் என்று அழைக்கப்படும் மேற்குலகம்.
பௌத்த சிங்கள பேரினவாதத்தின் தமிழின அழிப்பினை, ‘மனித உரிமை மீறல்கள்’ என்கிற பொதுக் கோட்பாட்டினுள் உள்ளடக்கும் அதேவேளை, தேசியத் தலைமை முன்னெடுக்கும் ஆயுதப்போராட்டத்தை ‘பயங்கரவாதம்’ என்கிற வரையறைக்குள் பொருத்திக் கொள்வதுதான் பிராந்திய நலன் பேணும் வல்லரசாளர்களின் போக்காக அமைகிறது.
அதாவது அரச பயங்கரவாதம் ‘மனித உரிமை’ சம்பந்தப்பட்டது, உரிமைப்போர், பயங்கரவாதத்தின் வெளிப்பாடு என்பதே நவீன உலகில் ஆட்சிசெலுத்தும் அரசியல் சொல்லாடலாக மாறி உள்ளதெனக் கூற லாம். தமது பூகோள, பிராந்திய நலனிற்கு முரணான போராட்டங்களை, பயங்கரவாதத் துள் இணைப்பதைத் தவிர, இவர்களுக்கு வேறு மார்க்கமில்லை.
அதேபோன்று, விடுதலைப் போராட்டங் களை தமது நலனிற்குச் சாதகமாகப் பயன் படுத்தி, ஒடுக்கும் அரசுகளை கட்டுக்குள் கொண்டு வரும் நகர்வு முழுமையடைந்ததும், போராட்ட சக்திகளை சிதைக்கும் அடுத்த கட்ட நகர்வு முன்னெடுக்கப்படுவதனை வரலாறு முழுவதும் காணக்கூடியதாகவிருக்கிறது. சிறீலங்கா இனப்பிரச்சினை விவகாரத்தில் கால்பதித்த இந்தியா, இதற்கொரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
தமிழ் ஈழத் தீர்வு: இந்தியா சிந்திக்குமா?
திராவிடப் பேரவை, பொதுச்செயலாளர் நா. நந்திவர்மன்

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் 4-12-2008 காலை சந்தித்து இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய இந்தியா எல்லா வகையிலும் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுச் சட்டமன்றமும் ஒருமனதாக போர் நிறுத்தம் ஏற்பட்டாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்திய அரசு இலங்கைக்கு வெளியுறுவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி அவர்களை அனுப்ப இந்திய தலைமை அமைச்சர் இசைந்துள்ளார். இலங்கைக்கு போகிறவர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு என்று கண்மூடித்தனமாக இனியும் வற்புறுத்திக் கொண்டிருப்பது அறிவுடைமை அல்ல.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் ஈழச் சிக்கலுக்கு தீர்வு எட்டப்பட வேண்டும். இந்திய அரசு தொடர்ந்து சொல்லி வரும் நிலைப்பாடு இது. நடைமுறையில் நிறைவேற முடியாத ஒரு நிலையை இந்தியா வலியுறுத்தி வருவது வியப்பளிக்கின்றது. ஒன்று பட்ட இந்தியாவுக்குள் தான் இந்தியாவும் பாகிஸ்தானும் இருக்க வேண்டும். மத அடிப்படையில்இரு நாடுகள் பிரியக் கூடாது என மகாத்மா காந்தி வலியுறுத்தினார். அவர் பேச்சை யாரும் கேட்க வில்லை. ஒன்றாக இருக்க இயலாத அளவுக்கு இரண்டு மதங்களுக்கிடையே மோதல் முற்றிவிட்டது. எனவே காலத்தின் கட்டாயம் இந்தியா. பாக்கிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் பிரிந்தன. சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமான மோதல் இனமோதல் மட்டுமா? தங்களுக்கிடையே ஆன மோதலும் அல்லவா? இந்தியாவும் பாகிஸ்தானும் பின்பற்ற முடியாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வு என்பதை எவ்வாறு ஈழத்தமிழர்களும் சிங்களவர்களும் பின்பற்ற வேண்டுமென இந்தியா எதிர்பார்க்கிறது?
ஒரே மதத்தைப் பின்பற்றிய மேற்குப் பாக்கிஸ்தானும் கிழக்குப் பாகிஸ்தானும் ஒன்று பட்ட நாடாக நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது இதே இந்தியா பாக்கிஸ்தானும் வங்கதேசமும் தனித்தனி நாடுகளாகப் பிரிய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இலங்கையில் மட்டும் ஏன் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தீர்வு என வலிந்து இந்தியா திணிக்க முற்படுகிறது? அறிவுத் தௌ¤வுள்ள எந்த அரசியல் நோக்கர்களுக்கும் இந்தியாவின் அணுகுமுறை புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது.
தமிழீழத்தை தமிழ் நாட்டரசு அங்கீகரிக்கத் துணிய வேண்டும் - கனகரவி

சிங்களப் பேரினவாதிகள் ஈழத் தமிழர்களை நெடுங்காலமாக அழித்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டு இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டதென்று பதியப்பட்டிருக்கும் வரலாற்றில் தமிழரின் தனியரசாட்சிகளை பறித்தெடுத்து ஆண்ட அந்நிய சக்திகள் மீண்டும் தமிழரை இன்னொரு அந்நிய சக்தியிடம் தாரைவார்த்து விட்டன.
04.02.1948 ஆம் ஆண்டு தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். இந்த நாளிற்குப் பின்னர் (முன்னரும் சிங்களப் பேரினவாதிகள் தமிழின அழிப்பில் அக்கறை காட்டிய வரலாறுள்ளது.) மிகவும் தீவிரமாகத் தமிழரை அழிப்பதில் இறங்கினார்கள்.
சிங்களப் பேரினவாதிகளின் தமிழின அழிப்பு நடவடிக்கையினால் ஒரு லட்சத்தையும் தாண்டிய உயிரிழப்புக்கள், தமிழரின் தாயக மண்ணில் சிங்களப் படைகள் நிலைகொண்டிருக்கின்ற பகுதிகள் உயர்பாதுகாப்பு வலயங்கள், மதிப்பிட முடியாத சொத்தழிவுகள், அவயவங்களை இழந்தவர்கள், இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்வோர் என ஈழத் தமிழருக்குப் பல துன்பங்களை ஏற்படுத்திய வன்முறையாளர்களாகவும் அரச பயங்கரவாதிகளாகவும் சிங்களப் பேரினவாதிகள் இருக்கின்றனர்.
சிங்களத் தீயில் வெந்து மடியும் தமிழர்கள் - காணொளி
பாவிருந்து
வருகின்றார் வருங்கால... ... ... - இரா.செம்பியன்
தன்னலம் கருதும் நீரான் தலைமைக்கோர் அணுவும் தேறான்
என்னிவன் ஈங்குப் போந்த இயற்கையை எளிதில் தேற்றாம்
பன்னலம் ஒடுக்கும் பேதைப் படுக்கும்நம் அறிவைக் கூட
அன்னவன் களத்தில் நிற்கும் ஆசையில் வருகின் றான்பார்
கண்களில் கருணை பொங்கக் கட்டியே தழுவிக் கொள்வான்
தண்மையாய் மொழியும் மாற்றம் தலைமுதல் கால்வ ரைக்கும்
உண்மையில் குளிர்ந்து போகும் ஒன்றுமே கிளத்த லாற்றாம்
வண்மைய ரொக்க வாயால் வாரியே வழங்கும் நீரான்.
ஈழத்துப் பரணி - பாவலர் முவ. பரணன்
தமிழீழ எல்லையைக் கருதுவீரே தரைவழி எதிரியின் நாட்டொடுதான்
இமிழ்கடல் முப்புறம் வேலியென இலங்குதல் வாய்ப்பே புலிப்படைக்கே!
போக்கும் வரத்தும் நாட்டிடையே பொருளை எடுத்துச் செல்வதற்கும்
தாக்கும் சமர்க்காம் கருவிகளைத் தாண்டித் திரட்டி வருவதற்கும்
கடல்வழி தானே சிறந்ததெனக் கருதிய புலிப்படைத் தலைவருந்தாம்
கடற்புலிப் பிரிவினைத் தோற்றுவித்தார் கடுமுறைப் பயில்வைமுடுக்கிவிட்டார்
நிலவியல் அமைப்பைக் கருதியதால் நெடுங்கடல் ஆளும் படைப்பிரிவை
நீள்புகழ்த் தலைவரும் கட்டினராம் நீர்வழி உறவை நிலைநாட்ட
உலகத்தமிழர் பக்கம்
ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற 'தமிழ் லீக்' அமைக்க முயற்சி. - மலே.இந்திய காங். இளைஞர் அணி

இலங்கைத் தமிழர்களின் அவல நிலை தொடர்பாக சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக 'தமிழ் லீக்' ஒன்றை அமைக்கும் யோசனையை மலேசிய இந்திய காங்கிரஸின் இளைஞர் அiணி முன் வைத்துள்ளது.
இந்த அமைப்பானது இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு போன்று ஐ.நா.வின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருக்க வேண்டும் என்று இதன் ஆலோசகர் வேல்பாரி தெரிவித்துள்ளர்.
ஸ்பெய்னில் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” மாநாடு

ஸ்பெய்னில் கடந்த வாரம் “நாடுகள் அற்ற தேசிய இனங்கள்” எனும் மாநாடு அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்டது.
இதில் கொசவோ, பாலஸ்தீனம், தமிழ், குரூடிஸ், கத்தலோன், பாஸ்க் ஆகிய இன மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்த மாநாட்டில், பிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரனும் கலந்துகொண்டு தமிழீழ மக்களின் சரித்திரம், முறிவடைந்த பேச்சுவார்தைகளும் உடன்படிக்கைகளும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன், இலங்கைத்தீவில் தமிழ் மக்களின் தற்போதைய மனித உரிமை, மனிதாபிமான நிலைமைகள் குறித்தும் உரையாற்றினார்.
வினாதல் விடுத்தல்
வினாதல் விடுத்தல் - முனைவர் இரா. திருமுருகன்
1. பண்பும் அறிவும் ஒழுக்கமும் நிறைந்திருப்பவனை மாந்தன் என்று கூறலாம். வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது செய்யாதவனை மாந்தன் என்று குறிப்பிடுதல் சரியான சொல்லாட்சியா?
- மணிமேகலைகுப்புசாமி, புதுவை-8.
வேண்டுகோள்
தமிழ்க்காவல் படிக்கும் தமிழ்நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்
தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இனம் ஆகியவற்றின் மேம்பாடு குறித்த கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், துணுக்குச்செய்திகள் முதலியவற்றைத் ‘தமிழ்க்காவல்’ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.
உங்கள் நண்பர்கள் முதலிய தொடர்புடையவர்களுக்குத் தமிழ்க்காவலின் இணைய முகவரியை அன்புகூர்ந்து தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.












