| அலைநெளி முடியே அவிழ்ந்தாலும் ஆடையுஞ் சிறிதே குலைந்தாலும் கொலைச்சின விழியே இமைத்தாலும் கூர்வாள் எதிரியின் மேற்போக்கோம் | 23 |
| என்றதொல் படையொழுங் குள்ளவராம் எதிரிக்கும் இரங்கும் மாண்பினராம் நின்றவெந் தமழரோ நிலைகெடினும் நீக்குதல் இல்லாப் படைமரபார்! | 24 |
| படைமறம் செருக்காம் என்பதனைப் பதடியச் சிங்களன் அறிவானோ? அடைந்தில் உள்ளே கிடப்பாரை அடக்கி அழித்தோம் என்பதுவாய் | 25 |
| வான்படை கொண்டே சிங்களவன்வதவதவென்றே குண்டுகளை தேன்மொழி யாரிளம் பிள்ளைகள்மேல் செத்தொழி வீரென வீசுகிறான் | 26 |
| எதிரில் வந்தே எதிரியென எதிரும் மறமம் உடையவனா குதிராய் உடலை வைத்தென்ன குறைகள் கொட்டத் தானுதவும் | 27 |
| புலிப்படை எதிரே சிங்களவன் போர்செயும் நோக்கொடும் வருவானோ? மலியும் வகையிற் படைவீரர் மண்டிக் கிடந்தே என்பயனோ? | 28 |
| தரையில் கடலில் வானத்தில் தாக்கும் முறையே புரியாமல் அரையாய்க் குறையாய்க் கற்றதனால் அடுதொழில் அறியபா தழிகின்றான்! | 29 |
| உலகின் பற்பல நாடுகளுக் கோடிப் போயே பயிற்சியென பலவுங் கற்றோம் எனவந்தே படைமுன் நின்றே சாகின்றான் | 30 |
| இசுரேல் சீனா பாக்கித்தான் எவ்வெந் நாடு கொடுத்தாலும் பொசுங்கிச் சாகும் சிங்களவன் பொறிகள் இயக்க அறியானே | 31 |
| இந்திய நாட்டின் அரசவர்க்கே இரேடார் கருவிகள் தந்தனவாம் எந்தக் கருவி கொடுத்தாலும் எப்படிப் பயிற்சி அளித்தாலும் | 32 |
| தாமே உண்மை அறிவினராம் தாக்கும் உத்தி அறிந்தவராம் ஏமாப் புணர்ந்த புலியினரை இழிஞன் சிங்களன் வெல்வானோ? | 32 |
| தரையின் தொடர்பாம் இலங்கையிலும் தரங்கம் பாடும் கடல்களிலும் புரைசல் மிக்க சிங்களவர் புலம்பத் தாக்கும் புலிகளைப்பார்! | 32 |
(தொடரும்)
பாவலர் முவ. பரணன், திருச்சிரப்பள்ளி, தமிழ்நாடு


